Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

முரசு புயல் எதிரொலி செங்கல்பட்டில் பரவலான மழை

செங்கல்பட்டு, நவ.2: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள முரசு புயலின் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. பகல் நேரத்தில் நிலவிய அதிகப்படியான வெப்பம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்தநிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயலின் தாக்கத்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றம் ஏற்பட்டு, வானம் கருமேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. செங்கல்பட்டு, ஆத்தூர், திம்மாவரம், புலிப்பாக்கம், வீராபுரம், பரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.