Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சிறுவர்களை வைத்து கஞ்சா, போதை மாத்திரை விற்பனை

துரைப்பாக்கம், ஜூலை 2: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவர்களை வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் வீரகுமார்(32). இவர் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி வந்து ஓ.எம்.ஆர்., பகுதியில் விற்று வந்தார். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கொடுக்காமல் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவர்களை வைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது கண்ணகிநகர் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று போலீசார் வீரகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். இவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.