Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமுதாய கூடங்கள் அதிகரிக்க கோரிக்கை

மாமல்லபுரம், ஜூலை 2: மாமல்லபுரம் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில், ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளது. இங்கு, சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நகராட்சி அலுவலக மாடியில் நேற்று முன் தினம் நடந்தது. கூட்டத்திற்கு, நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் வளர்மதி, துணை தலைவர் ராகவன், மேலாளர் சிவக்குமார், நகராட்சி இன்ஜினியர் சுபாஷினி தூய்மை ஆய்வாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சமுதாய கூடங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அதிகாரிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இவை அனைத்தையும், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் அபர்ணா தெரிவித்தார்.