Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மத போதகர் வீட்டில் நகை, பணம் திருட்டு

குன்றத்தூர், ஜூன் 2: வியாசர்பாடி ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் விமலா (41). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் கல்யாணபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபையில் போதகராக உள்ளார். இவரது வீட்டில் உறவினரான அந்தோணி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக விமலாவின் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி விமலா அடகு வைத்திருந்த மூன்றரை சவரன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பீரோவில் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பீரோவில் இருந்த பையை திறந்து பார்த்தபோது நகை, பணம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.