Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

கூடுவாஞ்சேரி, ஜூலை 1: போரூர் அடுத்த மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதியான சுபஸ்ரீ (21), ரவிபிரகாஷ் (22) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, போரூரிலிருந்து மாநகர பேருந்து மூலம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தனர். அப்போது, அதே பேருந்தில் பயணித்த, கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பாலா (23), என்பவர், மது போதையில் சுபஸ்ரீயிடம் ஆபாசமாக பேசி, கிண்டல், கேலி செய்தபடியே வந்துள்ளார். பேருந்து கிளாம்பாக்கம் வந்த பின், தம்பதியர் கீழே இறங்கி, வெளியூர் பேருந்துகள் புறப்படும் இடம் நோக்கி நடந்து சென்றனர்.

அப்போதும், பாலா அவர்களை பின் தொடர்ந்து, சுபஸ்ரீவிடம் வம்பிழுத்தபடியே பின்னால் வந்துள்ளார். இதனைக் கண்டதும் ஆத்திரமடைந்த சுபஸ்ரீ மற்றும் அவரது கணவர் கணவர் ரவிபிரகாஷ் பாலாவை தட்டிக்கேட்டனர். இதில் ரவிபிரகாசுக்கும், பாலாவுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, சுபஸ்ரீ, கிளாம்பாக்கம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்து, நேற்று இரவு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.