Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குடிபோதையில் தகராறு: மகனை குத்தி கொன்ற தந்தை: காஞ்சியில் பரபரப்பு

காஞ்சிபுரம், ஜூலை 1: காஞ்சிபுரம் மாநகராட்சி காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (50), பூ மாலை கட்டி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ரூபேஷ் (25), டாட்டூ கலைஞராக சென்னையில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, வீட்டில் இருந்த கத்திரிகோலை எடுத்து ரூபேஷை குத்தியுள்ளார். மேலும் கத்தியையும் எடுத்து வந்து மகனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து ரத்தம் வெள்ளத்தில் ரூபேஷ் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ரூபேஷை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே ரூபேஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் ரூபேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தந்தை ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனை தந்தையே குத்திக்கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்

படுத்தியுள்ளது.