இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கூட்டம்: முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு உணவு வழங்கல்
Advertisement
பெ.நா.பாளையம், மார்ச் 4:இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்டத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் துடியலூர்- சரவணம்பட்டி சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் லீமா ரோஸ் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஆனந்த முருகன், முத்தமிழ் செல்வன், உதயசூரியன், நெல்லை ஜீவா, நஞ்சப்பன், மோகன், மாவட்ட நிர்வாகிகள் ஆண்டனி, ராஜா, ராமச்சந்திரன், மணிமாறன், ஈஸ்வரன், பாரி கணபதி, க்ளோரி ஜான் பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement