கே.எஸ்.சி. பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி
திருப்பூர், அக்.26: திருப்பூர் மாவட்டம் பள்ளிக்கல்வி துறையின் சார்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஒருநாள் பயிற்சி கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இதில் 22 மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தர்ம பிரபு,பாலசுந்தரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Advertisement
Advertisement