உலகம் முதியோர் தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்
Advertisement
சத்தியமங்கலம், அக்.2: அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதியோர் தினத்தையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பாரதியார் சாந்தி இல்லத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சத்தியமங்கலம் கிளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பொது மருத்துவர், இதய நோய் நிபுணர், கண் சிகிச்சை நிபுணர், எலும்பு மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு முதியவர்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முதியோர் தினத்தன்று இலவசமாக பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு முதியவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Advertisement