உடன்குடி, அக். 23: மெஞ்ஞானபுரத்தில் ஒன்றிய, மாநில ஊரக நூலக மேம்பாட்டு திட்டத்தில் ₹22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மெஞ்ஞானபுரம் பஞ். தலைவி கிருபா ராஜபிரபு தலைமை வகித்தார். உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் ஜெசிபொன்ராணி, மெஞ்ஞானபுரம் பொதுமகமை நிர்வாகிகள் ஜெயபோஸ், டேவிட்ராஜ், சொர்ணராஜ், இம்மானுவேல் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் பாலசிங் அடிக்கல் நாட்டினார். மெஞ்ஞானபுரம் சேகரகுரு டேனியல்எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். இதில் மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜபிரபு, எலியட்டக்ஸ் போர்டு பெண்கள் பள்ளி தாளாளர் சசிகுமார் பொன்துரை, திமுக கலை இலக்கிய அணி ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


