திண்டுக்கல், பிப். 8: திண்டுக்கல் தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடந்தது. இறுதி போட்டியில் திண்டுக்கல் ஞானம் மெமோரியல் அணி, எஸ்எஸ்எம். கல்லூரி அணியை 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சம்பத்குமார் தலைமை வகித்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ஜெயக்குமார், கவுதமன் செய்திருந்தனர்.
+
Advertisement


