சவர தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி
கோவை, செப். 29: தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தின் தெற்கு மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் நாவிதர் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் ஈச்சனாரியில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் அமைப்பு செயலாளர் வெள்ளிங்கிரி, கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
இக்கூட்டத்தில், ஈச்சனாரியில் உள்ள சங்க இடத்தில் மேற்கு மண்டல அலுவலகம் மற்றும் மண்டபம் கட்டுவது, சவர தொழிலாளர் சமுதாய மக்களின் கல்வி, திருமணம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவுவது, நலவாரியத்தில் பதிவு செய்த வீடில்லாத சவர தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement