அரசு பஸ் மோதி விவசாயி பலி
காங்கயம், மார்ச் 20: காங்கயம் அருகே உள்ள பெரியஇல்லியம் ஆலங்காடுதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சேமலையப்பன் (75). இவர் நேற்று தனது மொபட்டில் காங்கயம்-திருப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடைக்கு செல்வதற்காக மொபட்ைட திருப்பினார். அந்த நேரத்தில் வந்த அரசு பஸ், ெமாபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேமலையப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சேமலைப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement