Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடக மாநில மது கடத்தியவர் கைது

ஈரோடு, டிச. 31: ஈரோடு மாவட்டம், கோபி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஆசனூர் சோதனைசாவடியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர்.

அப்போது, அவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் அவர் திருப்பூர், கொங்கு மெயின்ரோடு, 4வது வீதியைச் சேர்ந்த ஜஸ்டின் (25) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த 2 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.