Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு நவீன நூலகத்தில் கோடைகால முகாம் நிறைவு

ஈரோடு, மே 28: ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் கோடைகால முகாம் கடந்த இரு வாரங்கள் நடந்தது. இதில், ‘கிட்ஸ் ரீடர்ஸ் கிளப்’ மூலம் வாசித்தல், நாளிதழ் மற்றும் நூல்கள் படித்தல், கதை சொல்லுதல் போன்றவை குறித்து கோடை கால பயிற்சியாக வழங்கப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாணவர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். மாணவி பிரவீணா வரவேற்றார். எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி சரிதா ஜோ, ஆசிரியர் தானதயாளன் ஆகியோர் பேசினர். கோடை கொண்டாடத்தில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் சான்றிதழ் வழங்கினார். நிறைவில், நவீன நூலக நூலகர் ஷீலா நன்றி கூறினார்.