Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

52 கிலோ குட்கா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

ஈரோடு, ஜூலை 16: ஈரோட்டில் 52 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வைராபாளையம் வாய்க்கால் கரை பகுதியில் கருங்கல்பாளையம் எஸ்ஐ பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் ஈரேடு கேஎன்கே சாலையை சேர்ந்த கிருபாகரன் (19), மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யுகன்ராஜ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் பையை சோதனை செய்தபோது அதில், 51.492 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.