Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

பெருந்துறையில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம்

பெருந்துறை,பிப்.4: அண்ணா 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்துறையில் ஈரோடு மத்திய மாவட்ட திமுக சார்பில் பேரணி மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். ஊர்வலம் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம், குன்னத்தூர் நால்ரோடு, பவானி ரோடு வழியாக அண்ணா சிலையை வந்தடைந்தது.

அங்கு அண்ணா சிலைக்கு தோப்பு என்.டி.வெங்கடாசலம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, சின்னசாமி, செல்வராஜ், சோளி பிரகாஷ், கனகராஜ், பிரபு, சுப்பிரமணியம், ராஜா, பேரூர் செயலாளர்கள் ராஜேந்திரன், அகரம் திருமூர்த்தி, தங்கமுத்து, செந்தில் முருகன், குருசாமி, கே.பி.தங்கமுத்து, சென்னியப்பன் திருமூர்த்தி,பழனிச்சாமி, மாநில தேர்தல் பணிக்குழு துணை தலைவர் கே.பி.சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சன் சுரேஷ், மகளிர் அணி அமைப்பாளர் ஹேமலதா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.