Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விவசாயிகள் நில உடமை விவரங்களை நாளைக்குள் பதிவு செய்ய வலியுறுத்தல்

ஈரோடு,மே19: ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அரசு திட்டங்களில் பயன்பெற தங்களது நில உடமை விபரங்களை நாளைக்குள் (20ம் தேதி) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘‘விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெற, தங்கள் நில உடமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை ஆவணங்களை,ஒவ்வொரு முறையும் சமர்பிப்பதை தவிர்க்கவும், அரசு திட்டங்களில் விவசாயிகள், குறித்த நேரத்தில் பயன் பெறவும், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க ‘வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்துகிறது.