ஈரோடு, டிச. 10: மதவெறிக்கு எதிராக ஈரோடு நகரில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.ஈரோடு நகரில் உள்ள பிரதான சாலைகளான மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை ரோடு, காந்திஜி ரோடு, திருமகன் ஈவெரா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மதவெறிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அதில், சமீபத்திய திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிடும் வகையில், ‘அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா?’ ‘காக்க காக்க தமிழ்நாட்டை காக்க, விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட, போராடுவோம்…வெல்வோம்…” எனும் வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அந்த போஸ்டரை ஒட்டிய அமைப்பினர் யார்? என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் அச்சிடப்படவில்லை.மதவெறிக்கு எதிராக நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், ஈரோடு நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement


