கோபி, ஆக.29: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நம்பியூர் வட்ட 6வது வட்ட கிளை பேரவை கூட்டம் சமுதாய கூடத்தில் வட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
+
Advertisement



