Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இன்று உலக புலிகள் தினம் புலிகளின் வாழ்விடத்திற்கு ஏற்ற வனப்பகுதியாக விளங்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

சத்தியமங்கலம், ஜூலை 29: உலக புலிகள் தினமான இன்று புலியின் வாழ்விடத்தை காப்பதும் அதன் எண்ணிக்கையை பெருக்குவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.வனப்பகுதியில் உள்ள மரங்கள் மழை வளத்தை பெருக்கி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மிக முக்கிய பணியை புலிகள் ஆற்றி வருகிறது. வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. குறிப்பாக, வனப்பகுதியில் வாழும் புலிகளை பாதுகாப்பதில் வனத்துறை எதற்காக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நாம் இந்த உலகப் புலிகள் தினத்தில் அறிந்து கொள்வது மிகவும் அத்தியாவசியமானது.