ஈரோடு, ஆக. 28: ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, மது விற்பனையை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், சத்தியமங்கலம் அடுத்த வடக்குபேட்டை பகுதியில் கஞ்சா விற்ற, அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (27), தருண்குமார் (23), ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். குட்கா விற்ற ராஜஸ்தான் மாநிலம் குல்தானாவை சேர்ந்த சுஜா ராம் (27), ஈரோடு அடுத்த பெரிய செட்டிபாளையத்தை சேர்ந்த பீட்டர் (57), கொல்லம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4.5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமாக மது விற்ற, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த வேலன் (24), ஈரோடு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த அருள் (55), பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த சுந்தர் ராஜ் (64), பவானி கடையாம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து (73), பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (46), சீதபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் (59), பவானி அடுத்த தாளப்பையனூரை சேர்ந்த ரவிக்குமார் (26), அந்தியூர் அடுத்த புதுக்காட்டை சேர்ந்த குகன் (23), செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த குபேந்திரன் (36), அய்யாசாமி (43), ஈரோடு ஆன்.என்.புதூரை சேர்ந்த ராஜேஷ் (40), கோபி அடுத்த நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த பூபதி (28), தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டை சேர்ந்த கருப்பையா (34),
கணக்கம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (47), அபிரஹாம் (51), சண்முகம் (63), ராமலிகபுரத்தை சேர்ந்த துரைசாமி (65), ராமநாதபுரம் மாவட்டம் அஞ்சுகோட்டையை சேர்ந்த தனபால் (44), சிவகிரியை சேர்ந்த குமார் (48), ஆனந்தி (32), சூரியம்பாளையத்தை சேர்ந்த சத்திவேல் (39), பெருந்துறை அடுத்த சீனாபுரத்தை சேர்ந்த பிரபு (38), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த டேவிட் (60), திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியை சேர்ந்த தினேஷ்ராஜன் (34), ஈரோடு நாராயணவலசை சேர்ந்த ராமசாமி (61) ஆகிய 25 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 556 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.



