ஈரோடு, ஆக.28: ஈரோட்டில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய 2 பேரை தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். ஈரோடு மூலப்பாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த கவுதம் (17). இவரது சகோதரர் ரோஷன். ஈரோடு சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த வைரவேல் (22), மற்றும் ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையம் ரெயின்போ கார்டன் சந்திர சேகரன் மகன் பிரதாப் (22), ஆகியோர் போதை மாத்திரை விற்பதாக, கடந்த 2 மாதத்துக்கு முன்பு, ஈரோடு தாலுகா போலீசில் ரோஷன் புகார் அளித்திருந்தார். இதனால், கோபமடைந்த வைரவேல், பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் நவீன்,
தீபக் ஆகியோர், கடந்த 25ம் தேதி ரோஷனின் சகோதரர் கவுதமை ரயில்வேகாலனி மைதானத்துக்கு அழைத்து சென்று பீர் பாட்டிலால் அடித்தனர். பின்னர் அவரை வீட்டின் அருகே விட்டு சென்றனர். இதில் கவுதமிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, கவுதம் அளித்த புக்கரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து வைரவேல், பிரதாப் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தீபக், நவீன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைதான வைரவேல் மீது 12 குற்ற வழக்குகள் போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது.
விடிய விடிய ரோந்து சென்ற விவசாயிகள்
தண்ணீர் திறந்து 10 நாட்களுக்கு மேலாகியும் கடைமடை வரை தண்ணீர் வராததால் சந்தேகமடைந்த விவசாயிகள் தண்ணீர் திருட்டு நடக்கிறதா? என கீழ்பவானி கால்வாய் கரையோரம் இரவு முழுவதும் விடிய விடிய ரோந்து சென்றனர். அப்போது, 50 குழாய் மூலம் தண்ணீர் திருட்டை கண்டுபிடித்தனர்.




