Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மது, குட்கா விற்ற 7 பேர் கைது

ஈரோடு,மே26:ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது, குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதில் சட்ட விரோதமாக மது விற்ற, சத்தியமங்கலம் அடுத்த கொத்துக்காட்டை சேர்ந்த மணிராஜ் (52), ராமநாதபுரம் மாவட்டம் இழுப்பக்குடியை சேர்ந்த அப்பாதுரை(25) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார்,அவர்களிடம் இருந்த 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு கிருஷ்ணாம்பாளையத்தில் மளிகை கடையில் குட்கா விற்ற, அதேப்பகுதியை சேர்ந்த கண்ணன் (56), வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சந்திரசேகர் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய, ஈரோடு வேப்பம்பாளையத்தை சேர்ந்த சிவகுமார்(41), பெருந்துறை அடுத்த கூரபாளையத்தை சேர்ந்த பூபதி(43), தருமபுரி மாவட்டம் நல்லாம்பட்டியை சேர்ந்த பூபதி(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.