Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சத்தியமங்கலம் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்: மழைக்கால முன்ெனச்சரிக்கை நடவடிக்கை

சத்தியமங்கலம், மே 25: தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் நோய் பரவுவதை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வடிகால் இருக்கும் பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது. நகராட்சி பகுதியில் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்மன்ற தலைவர் ஜானகிராமசாமி மேற்கொண்ட முயற்சியின் மூலம் தனியாரிடமிருந்து நன்கொடையாக சைக்கிள் பெறப்பட்டு அதன் மூலம் பணியாளர்கள், கொசு மருந்து அடித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.