Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரூ.5.52 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை, ஜூலை 23: பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 4678 முதல் தர மூட்டைகள் வந்தது.‌ இதில் குறைந்தபட்ச விலையாக ரூ.147.99க்கும், அதிகபட்ச விலையாக ரூ.161.19க்கும், சராசரி விலையாக ரூ.157.76க்கும் ஏலம் நடைபெற்றது. மேலும் 3147 இரண்டாம் தர மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதில் குறைந்தபட்ச விலையாக ரூ.81.99க்கும், அதிகபட்ச விலையாக ரூ.150.69க்கும், சராசரி விலையாக ரூ.140.79க்கும் ஏலம் நடைபெற்றது. முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் என 7825 மூட்டைகளை கொண்ட 3 லட்சத்து 65 ஆயிரம் கிலோ எடையுள்ள கொப்பரைகள் மொத்தம் ரூ.5 கோடியே 52 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.