Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மூன்றரை கிலோ கஞ்சாவுடன் ஈரோட்டில் 2 வாலிபர்கள் கைது

ஈரோடு, ஆக.21: ஈரோட்டில் 3½ கிலோ கஞ்சா மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கத்துடன் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாணிக்கம்பாளையம் மேல்நிலை குடிநீர் டேங்க் பகுதியில் நேற்று ஈரோடு வடக்கு போலீஸ் எஸ்ஐ சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முற்பட்டனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் ஈரோடு வீரப்பன் சத்திரம் சத்தி சாலையை சேர்ந்த நந்தா மொசஸ் (23), ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியை சேர்ந்த அருள்குமார் (24) ஆகியோர் என்பதும், அவர்களை சோதனை நடத்தியபோது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3.600 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் பழங்குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்தனர்.