Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கிணற்றில் சிக்கிய 4 மயில் குஞ்சுகள் மீட்பு

ஈரோடு, ஆக.20: ஈரோட்டில் கிணற்றில் சிக்கிய 4 மயில் குஞ்சுகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோயில் 2வது வீதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. தோப்புக்குள் 40 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் 4 அடி நீர் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் முதல் கிணற்றுக்குள் இருந்து மயில் சத்தம் போட்டவாறு இருந்தது. அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது 4 குட்டிகளுடன் மயில் வெளியே வர வழியின்றி தவித்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கினர். தாய் மயில் அங்கிருந்து பறந்து கிணற்றுக்கு வெளியே வந்தது. தீயணைப்பு வீரர்களை பார்த்து மயில் குஞ்சுகள் கிணற்றில் இருந்த பொந்துக்களுக்குள் சென்றது.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நான்கு மயில் குஞ்சுகளையும் தீயணைப்பு துறையினர் மீட்டு, வெளியே கொண்டு வந்து விட்டனர். அப்போது தாய் மயிலுடன், அந்த 4 மயில் குஞ்சுகளும் பறந்து சென்றன.