Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கடம்பூர் மலைப்பகுதியில் சேற்று நீரை வாரி இறைத்து சூட்டை தணித்த காட்டு யானை

சத்தியமங்கலம், ஜூலை 20: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன பகுதியில் சரி வர மழை பெய்யாததால் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குரும்பூர் வனத்தில் காட்டு யானை சாலை ஓரத்தில் உள்ள நீரோடையில் நின்று கடும் வெயிலில் உடல் வெப்பத்தை தணிக்க தேங்கி இருந்த சேற்று நீரை தனது உடல் மீது தும்பிக்கையால் வாரி இறைத்த படி வெகு நேரம் நின்று இருந்தது.

இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானை நிற்பதை கண்ட அச்சம் அடைந்தனர். உடல் சூட்டை தணிப்பதற்காக காட்டு யானை சேற்று நீரை உடல் மீது இறைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வனவிலங்குகளின் குடிநீர் தாகத்தை தணிக்க வனப் பகுதியில் செயற்கைத் தொட்டிகள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.