கோபி, ஆக.19: கோபியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து ரீடு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதை பொருள் இல்லாத சமுதாயம், குழந்தை திருமணம் இல்லாத சமுதாயம், அனைவருக்கும் உயர் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தி ரீடு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, டாக்டர். ரமேஸ்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரீடு ஒருங்கிணைப்பாளர் உமாமகேஷ்வரி வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியமூர்த்தி, கள ஒருங்கிணைபமாளர் சரஸ்வதி உளறிட்ட பலர் கலந்து கொண்டனர்.



