Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டாஸ்

ஈரோடு, ஜூன் 19: ஈரோட்டில் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு பதுக்கி கைதான 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு சூரியம்பாளையம் அமராவதி நகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் லோகேஷ்வரன் (22). இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெய்காரன் பாளையத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் ஜீவானந்தம் (28).  இவர்கள் இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை தலா 3.200 கிலோவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக சித்தோடு போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட லோகேஷ்வரன், ஜீவானந்தம் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.