Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குட்கா பறிமுதல் கடை உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ஈரோடு, ஜூன் 19: ஈரோட்டில் பெட்டி கடை மற்றும் மளிகை கடையில் இருந்து 132 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாநகர பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, பெரிய சேமூர், சுக்கிரமணியன் வலசு ஆகிய பகுதிகளிலுள்ள பெட்டிக்கடை, மளிகை கடைகள் என 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், சுக்கிரமணியவலசு பகுதியில் ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோன்று, பெரிய சேமூரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் இருந்தும் குட்கா பொருட்கள் கண்டறியப்ட்டது. தொடர்ந்து, இரு கடைகளிலும் சேர்த்து மொத்தம் 132 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.