Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பஸ் வசதி கேட்டு மலை கிராம மக்கள் மனு

ஈரோடு, ஆக. 18: கடம்பூர் மலைக்கிராமத்தில் சாலை இருந்தும், அரசு பேருந்து வசதி இல்லை என கூறி நகலூர் கிராம மக்கள் ஈரோடு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மனு வழங்கி கூறியதாவது: சத்தியமங்கலம் தாலுகா கரளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காடாநல்லி, நகலூர், உகினியம், பதிரிகாடு போன்ற மலை கிராமங்கள் மிகவும் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளன. இங்கு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக நடமாடும். இப்பகுதியை யானைக்காடு என்பார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து காடநல்லிக்கு தினமும் காலை 5 மணி, மதியம் 12 மணி, மாலை 5.30 மணிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்துகள் நகலூர் மலை கிராமத்துக்கு வராமல் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். அங்கிருந்து நகலூருக்கு சாலை வசதி உள்ளது. ஆனால், அடர்ந்த வனப்பகுதி, யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நடந்து செல்ல முடியாது. இக்கிராமத்தில், 145க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 2 கிலோ மீட்டர் தூரம் யானைக்காடு வழியாக வந்து பேருந்து ஏறி செல்லும் அவல நிலையில் உள்ளதால், நகலூர் கிராமத்துக்கே பஸ் வந்து செல்லும்படி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.