ஈரோடு, ஆக. 18: ஈரோடு சென்னிமலை சாலை மணல்மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியதாவது: ஈரோடு தாலுகா சென்னிமலை சாலை மணல்மேடு வீதியில் எல்லை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் எங்கள் பகுதியை சேர்ந்த 500 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயிலால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை. ஒரு சில நபர்கள் தூண்டுதலின் காரணமாக கோயிலை எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். கோயில் உள்ள இடத்தில் விஏஓ அல்லது தாசில்தார் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், கோயிலை அகற்றாமல் அதே இடத்தில் இருக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
+
Advertisement



