Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஈரோடு, மே 18: சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் இன்ஜினியர் சண்முகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சோலாரில் தனது நன்றி அறிவிப்பு பயணத்தை துவங்கிய அவர் புதுவலசு, லக்காபுரம், ஊத்துக்குளி, மொடக்குறிச்சி, எழுமாத்தூர், எல்ல கடை, விளக்கேத்தி, சிவகிரி உள்ளிட்ட ஊர்களில் நன்றி தெரிவித்தார். அவரை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் சண்முகன் பேசியதாவது: முதல்வர் விஜய் சிந்தனை முழுவதும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே இருக்கிறது. நான்கு நாட்களில் நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். டாஸ்மாக் மதுக்கடையை மூடியது, சிங்கப்பெண் படையை உருவாக்கியது, ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கியது என இனி ஒவ்வொரு நாளும் திருவிழாதான்.

நீங்கள் விசிலை நம்பி வாக்களித்ததால் தான் இந்த மாற்றம். வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும். தவெக தலைவர் விஜய் மொடக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் வாக்காளர்களை சந்திக்க வருவார்.