Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததால் பெரியசடையம்பாளையம் குளத்தில் நீர்மட்டம் மளமளவென சரிந்தது

ஈரோடு,ஆக.17: ஈரோட்டில் பருவமழை பொய்த்து போனதாலும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததாலும் பெரியசடையம்பாளையம் குளத்தில் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசடையம்பாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீரும், கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும் வந்து சேரும். இந்த குளத்தினால், காசிபாளையம்,நாடார் மேடு, சாஸ்திரி நகர், ரகுபதிநாயக்கன்பாளையம், லட்சுமி கார்டன், எல்ஐசி காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர முக்கிய ஆதாரமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் வறண்டு காட்சியளித்தது.

இந்த குளத்தை மழைநீர் செறிவு திட்ட குளமாக மாநகராட்சி மாற்றியது. குளத்தின் உள்ளே 50க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைத்து,அதன்மூலம் மழை நீர் நிலத்தடி நீராக மாறும் வகையில் பணிகள் செய்யப்பட்டன.அதுமட்டுமின்றி பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் நடைபயிற்சி பாதை, ஓய்வு எடுக்கும் இடம் என்று பல வசதிகள் செய்யப்பட்டன.தற்போது பருவநிலை மாற்றம், பருவமழை பொய்த்து, பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடாததால், குளத்திற்கு நீர் வரத்து முற்றிலும் தடைபட்டு, குளத்தில் உள்ள நீர் இருப்பு மளமளவென சரிந்து வருகிறது.