Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மொடக்குறிச்சி, ஜூலை 17: கந்தசாமிபாளையத்தில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சந்திரசேகர், முன்னாள் தலைவர் குமாரசாமி, சிதம்பரம், நல்லசாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.