Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஈரோடு, ஜூலை 17: ஈரோடு வீரப்பன் சத்திரம் ஆண்வர் வீதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், ஈரோடு வடக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த அதேபகுதியை சேர்ந்த பிரேம்குமார் (39), என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து கேரளா மாநில லாட்டரி சீட்டு 10 பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், பு.புளியம்பட்டி மேட்டுப்பாளையம் சாலையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த அபிஷேக் (26), புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரை சேர்ந்த மணிகண்டன் (30), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு செல்போன், ரூ.1,000 ரொக்கம், லாட்டரி சீட்டு எண்கள் எழுத வைத்திருந்த நோட்டு போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.