Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாணவியை கடத்தி பாலியல் தொல்லை

ஈரோடு,ஆக.14: ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி அவரது சித்தப்பா வீட்டில் தங்கி, ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த மாணவியிடம் அறிமுகம் இல்லாத வாலிபர் ஒருவர், ஏற்கனவே பள்ளி அருகே தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே அந்த மாணவி நின்றார். அப்போது அந்த வாலிபர் அங்கு வந்து மாணவியை, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மாணவியின் சித்தப்பா, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் யார் என்பது குறித்த விபரம் தெரியவில்லை. போலீசார் போக்சோ மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து வாலிபரை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.