Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொள்முதல் விலையை உயர்த்துமா தமிழ்நாடு அரசு? ஈரோட்டின் பிரதான நீராதாரமான பெரும்பள்ளம் ஓடையில் மண்டிக்கிடக்கும் புதர்: கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

ஈரோடு, ஆக.14: குளம், குட்டைகளுக்கு மழை நீர் செல்லும் பெரும்பள்ளம் ஓடை நீர் வழித்தடத்தில் புதர்மண்டி கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சியின் பிரதான நீராதாரமாக பெரும்பள்ளம் ஓடை விளங்குகிறது.சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு பகுதியில் உள்ள புங்கம்பாடியில் கீழ்பவானி கால்வாயின் கசிவுநீரில் இருந்து பெரும்பள்ளம் ஓடை தொடங்குகிறது. பின்னர் திண்டல், நல்லியம்பாளையம், முத்தம்பாளையம், சூரம்பட்டி, பெரியார் நகர், மரப்பாலம் வழியாக சென்று வெண்டிபாளையம் பீளமேடு என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. தற்போது புங்கம்பாடி முதல் சூரம்பட்டி வரை பெரும்பள்ளம் ஓடையில் முற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது.

குறிப்பாக, ஓடை முழுவதுமே கோரைப் புற்கள் ஆக்கிரமித்துள்ளதால், அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் ஓடையிலேயே தேங்கி விடுகிறது. இதனால், காவிரி ஆறு மற்றும் குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்ல வழியின்றி கழிவு நீராக மாறும் அபாயம் உள்ளது. ஆனால், இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்துள்ள புதர்களையும், கோரைப்புற்களையும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.