Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் குடிநீரின்றி பக்தர்கள் அவதி

ஈரோடு, ஆக. 13: திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குடிநீர் வராததால் பக்தர்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி, அபிராமி அம்மன் உடனமர் அமர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோயில் கடந்த 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டப்பட்டது. இந்த கோயிலில் கந்தசஷ்டி விழா, கிருத்திகை, விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த கோயிலில் தங்கத்தேர் வழிபாடு பிரசித்தி பெற்றது.

இதனால், விஷேச நாட்களில் எப்போதும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆடி அமாவாசையையொட்டி, கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வந்திருந்தனர். மதிய நேரத்தில் ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமியை வழிப்பட்டனர். மலை அடிவாரத்திலுள்ள அம்மன் சன்னதியில் திரளான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர். கொளுத்தும் வெயிலைகூட பொருட்படுத்தாமல் கோயிலுக்கு வந்த பக்தர்கள், அம்மன் சன்னதி முன்பாக இருக்கும் வளாகத்தில் அமர்ந்தனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்த வயது மூத்த பக்தர்கள், ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள குழாயில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.