Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சத்தியமங்கலத்தில் தனியார் பாரில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை; வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள்

சத்தியமங்கலம், ஜூலை 13: சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மதுபான பாரில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யபடுகிறது. இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள் வீடியோ வைரலாகி வருகிறது. சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் காந்திநகர் அடுத்துள்ள தனியார் பள்ளி அருகே தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. மது பிரியர்கள் இந்த விடுதிக்கு சென்று தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி அருந்துகின்றனர். இந்த நிலையில், நேற்று இந்த மதுபான விடுதியில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக மது பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் மதுபான விடுதி நடத்துபவர்களிடம் மது வாங்கும் நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.180க்கு விற்பனை செய்த மதுபானத்தை தற்போது கூடுதல் விலைக்கு அதாவது 200 ரூபாய்க்கு ஏன் விற்பனை செய்கிறீர்கள் என கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்யும் காட்சி உள்ளது. இது குறித்து மது பிரியர்கள் கூறியதாவது: தனியார் மதுபான விடுதிகளில் ஏற்கனவே டாஸ்மாக் கடையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் மேலும் விலை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுபானங்களை விற்க அரசு நிர்ணயம் செய்துள்ள விற்பனை பட்டியலை வைத்து தனியார் மதுபான விடுதிகளில் மதுபானங்களை விற்கப்படுகிறதா? என மதுவிலக்கு போலீசார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.