குட்கா, மது கடத்தியவர்கள் சிக்கினர்
ஈரோடு, ஆக. 12: ஈரோடு ஆணைக்கல்பாளையம் அடுத்துள்ளது குறிக்காரன்பாளையம். இங்குள்ள கடைகளில் உணவுப்பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். இதில் தங்கம்மா (65) என்பவரது பெட்டிக்கடையில் 3.200 கிலோ குட்காவை பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோன்று திருநகர் காலனியில் கணேசன் (54) என்பவரது பெட்டிக்கடையில் நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் போலீசார் குட்காவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
தாசக்கவுண்டர் புதூர் நால்ரோட்டில் பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் அவ்வழியாக வந்த மொபட்டை சோதனை செய்தபோது ரூ.17,400 மதிப்புள்ள 120 மதுபாட்டில் இருந்தது. இதனை கடத்திய டி.என்.பாளையத்தைச் சேர்ந்த அமலா (35) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று, கர்நாடக மாநில மது கடத்திய சேலத்தை சேர்ந்த நவீன்ராஜ் (33) என்பவரை கைது செய்த கோபி மதுவிலக்கு போலீசார், அவரிடம் இருந்த 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.