Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

8ம் வகுப்பு தனித்தேர்வு வினாத்தாள் ஈரோடு வருகை

ஈரோடு,ஆக.12: ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கான வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு வரும் 17ம் தேதி முதல் துவங்கி, 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் 175 பேர் எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக ஈரோடு சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 17ம் தேதி தமிழ், 18ம் தேதி ஆங்கிலம், 19ம் தேதி கணிதம், 20ம் தேதி அறிவியல், 21ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டு காப்பு மையத்தில் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் துறையினர் செய்து வருகின்றனர்.