Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவன் சாதனை

கோபி, ஆக. 12: மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று குமுதா பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். சென்னை துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சார்பாக 51வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவன் ஹரிஷ் கலந்து கொண்டு சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் துணை இளையோர் குழு பிரிவின் பிஇஇபி சைட் பிரிவில் 600க்கு 580 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

மேலும், 10 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் துணை இளையோர் பிரிவில் 12ம் வகுப்பு மாணவி ரிதன்யா 400க்கு 356 புள்ளிகள் பெற்றும் இளையோர் பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவன் ரிஷிக் ஆர்யா 400க்கு 331 புள்ளிகள் பெற்று, இருவரும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.தேசிய அளவில் மற்றும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவர்களை தாளாளர் ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும், துணைத் தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் டாக்டர். அரவிந்தன், இணைச் செயலாளர் டாக்டர். மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.