ஈரோடு, ஆக.10: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை, புகையிலை பொருட்கள், லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற, கே.என்.பாளையத்தை சேர்ந்த சித்தன்(65), ஈரோடு கிருஷ்ணாம்பாளையத்தை சேர்ந்த முகமது சுல்தான்(60) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக மது விற்ற, ஈரோடு கொளத்துப்பாளையத்தை சேர்ந்த ஜோதிமணி (61), பவானியை சேர்ந்த கண்ணன் (26), அந்தியூர் அடுத்த பெருமாள்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (47), ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த பரமசிவம் (51), ஈரோடு வடக்கு அய்யங்காட்டை சேர்ந்த சின்னசாமி (75) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement



