Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பழங்குடியினர் தின விழாவில் பாரம்பரிய இசை கருவி வாசித்து நடனம் ஆடி அசத்திய பெண்கள்

சத்தியமங்கலம்,ஆக.10: ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் ஊராளி பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் (9ம் தேதி) உலக பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது.  இதையொட்டி ஊராளி பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் பரண் டிரைபல் சொசைட்டி சார்பில் பழங்குடியினர் தின விழா கடம்பூர் மலைப்பகுதியில் நடைபெற்றது. கடம்பூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பீனாச்சி வாத்தியங்கள் வாசித்தபடி பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.

மலைவாழ் பழங்குடியின பெண்களின் நடனம் காண்போர் கண்களை கவர்ந்தது. பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் பழங்குடியின மக்கள் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பழங்குடியினர் மக்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி கடம்பூர் பஸ் நிலையத்தில் தொடங்கி டான் போஸ்கோ மாணவியர் விடுதி வரை நடைபெற்றது.