Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொழிலாளர் விதிகளை மீறிய 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஈரோடு,ஜூலை10: ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் விதிகளை மீறியதாக 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜகுமார் தலைமையில் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்களால் பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ஹோம்கள், நோட்டு புத்தக கடைகளில் கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 116 கடைகளில் ஆய்வு செய்ததில், 28 கடைகளில் முரண்பாடுகளும், பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் வழிபாட்டு தலங்கள், ஸ்டேஷனரி கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக 34 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டன.