Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வருவாய் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 10: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தலைமை தாங்கினார்.சட்டமன்ற தேர்தல் முடிந்து 2 மாதங்கள் ஆகியும் வருவாய் துறையினர் செலவிட்ட தொகையை தேர்தல் ஆணையம் இதுவரை விடுவிக்கவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் அரசு விழா,ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும். வருவாய் துறை வழங்கும் சான்றிதழ்களின் விசாரணை கால வரம்பை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நீண்ட காலமாக வருவாய் துறையில் காலியாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.