Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மொடக்குறிச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 3ம் கட்ட பயிற்சி

ஈரோடு,ஜூலை10: மொடக்குறிச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த மூன்றாம் கட்ட 3 நாள் பயிற்சி நேற்று துவங்கியது.மொடக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த மூன்றாம் கட்ட 3 நாள் பயிற்சி நேற்று துவங்கியது. காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில், கணக்கெடுப்பில் 36 வகையான கேள்விகளை வீடு, வீடாக சென்று கேட்டு பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக தனியாக மொபைல் போனில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.